திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய முதன்மை தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி சாதனா. இவர் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகிறார். அவரை அந்த பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கி தலைமை ஆசிரியர் அமரும் இருக்கையில் அமரவைத்து பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டினார்கள்.
இந்த சம்பவம் அந்த பள்ளியில் இதுவே முதல் முறை. மாணவி சாதனாவை பள்ளி தலைமை ஆசிரியர் இருக்கையில் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் அமரவைத்து பாராட்டினார்.