வாட்ஸ்அப் அப்டேட்களை கண்காணிக்கும் தளமான WABetaInfo வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் சமீபத்தில் டெஸ்க்டாப் பயனாளர்களுக்காக மீடியா ஆட்டோ டவுன்லோடிங் கன்ட்ரோல் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக, வாட்ஸ்அப் அதன் டெஸ்க்டாப் பதிப்பில் அதிக அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
வாட்ஸ்அப்பின் புதிய பீட்டா அப்டேட்டின் படி, பயனாளர்கள் ஏதேனும் ஒரு புகைப்படத்தை எவருக்கேனும் அனுப்பும் முன் அதன் முழு அல்லது குறிப்பிட்ட பகுதியை மங்கலாக்கும் வகையில் மாற்றத்தை செய்துள்ளது வாட்ஸ்அப் .
இந்த புதிய மாற்றத்தின் உதவியுடன், அத்தியாவசியமற்ற பகுதிகளை மங்கலாக்க முடியும் என தெரிவித்துள்ளது வாட்ஸ்அப்.