காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி ஊராட்சியில் நேற்று புதிய சந்தை திறப்பு விழா நடந்தது. காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி இழுப்பக்குடி மாத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் விளையும் காய்கறிகளை இப்பகுதியிலேயே விற்பனை செய்யும் விதமாக சந்தை அமைத்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் அறியக்குடி இலுப்பை குடி மாத்தூர் அஞ்சனை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் சந்தைக்காக காரைக்குடி அல்லது புதுவயல் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதன் அடிப்படையில் அறியக்குடிஊராட்சியில் புதிய சந்தை திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய சந்தை வளாகத்தை நேற்று காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் திறந்து வைத்தனர். இதன் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் பயன் அடைய முடியும் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.