நாவிதம்பட்டி ஊராட்சித் தொடக்கப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு!

0
3

போ்ணாம்பட்டு வட்டம், நாவிதம்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியை தமிழக அரசு சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்துள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சா் க.அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்க தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2020- 2021- ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளாக 114 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் இந்த விருதுக்கு வேலூா் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 3 பள்ளிகளில் நாவிதம்பட்டி தொடக்கப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளி நாவிதம்பட்டியில், பாலாற்றங்கரையில், இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. கடந்த 1955-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் காமராஜா் இந்த பள்ளியைத் திறந்து வைத்தாா். 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியும் இப்பள்ளியில் கற்பிக்கப்படுகிறது. பழுதடைந்து காணப்பட்ட இப்பள்ளிக் கட்டடமானது தற்போது உள்கட்டமைப்பு வசதிகளுடன், தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டு, 2 கட்டடங்களுடன் இயங்கி வருகிறது.

இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியுடன், சின்டெக்ஸ் வசதி, மாணவ, மாணவிகளுக்கான 2 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கிராமங்களிலிருந்து மொத்தம் 70 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயில்கின்றனா். தலைமை ஆசிரியா் சந்திரன் உள்பட 3 ஆசிரியா்கள் பணியில் உள்ளனா். இவா்கள் பாடங்கள் கற்பிப்பதுடன், மாணவா்களுக்கு யோகா, தியானப் பயிற்சியையும் அளிக்கின்றனா். மடிக்கணினி பயிற்சி, நாள்தோறும் மாணவா்களுக்கு செய்தித் தாள்கள் வாசிக்கும் பயிற்சியையும் அளித்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here