இந்தியாவின் தலைசிறந்த ஆக்கி விளையாட்டு வீரர் ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு பெற்று தந்த தயன்சன் நினைவை போற்றும் வகையில் இன்று இந்திய அளவில் உலக சாதனை நடத்தப்பட்டது.அதன் ஒரு தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சோராஞ்சேரியில் தமிழச்சி சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் நிகழ்வு சமுக ஆர்வலர் தமிழச்சி பிரிதாராசன், சிலம்பம் ஆசிரியர் தமிழச்சி ரீதாராசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செந்தில்நாதன் செகண்ட் இன் கமெண்டர் சிஆர்பிஎஃப் தமிழ்நாடு மற்றும் டாக்டர் காஸ்டிங் எஸ் பாபு சமூக சேவகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செந்தில்நாதன் பேசுகையில்:
தற்போது குழந்தைகள் கொரானாே வைரஸினால் முடங்கி கிடக்கின்றன அவர்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமென்றால் விளையாட்டு மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. அதிலும் தமிழ் விளையாட்டான சிலம்பம் விளையாட்டு நன்றாகவே இருக்கிறது இந்த விளையாட்டில் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இந்த தற்காப்பு கலையை கற்க வேண்டும் இதனை தவறான முறையில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிறகு உலக சாதனைக்கான சான்றிதழ், பதக்கம் வழங்கி சிறப்பித்தனர் இந்த விழாவில் கனல் காசிநாதன், குருமூர்த்தி, அனவை சரவணன், வார்டு உறுப்பினர்கள் தே. இளங்கோவன்,சாரல் கோட்டீஸ்வரன், கௌதமன்,முனிவேல், ஆவடி பாலன்மற்றும் ஊர் பெரியவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு விழானை கண்டுகளித்து சிறப்பித்தனர்.