சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் பிர்லாகணேசன் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பாக தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பெரியோர்கள் ஆகியோர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு மாற்று திறனாளி அடையள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் புதிதாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற விண்ணப்பித்தல், உதவித்தொகை பெற விண்ணப்பித்தல் போன்றவைக்கு விண்ணப்பித்தனர் தொடர்ந்து செவித்திறன், கண்பார்வை, எலும்பு பிரிவு போன்ற சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முனைவர் கதிர்வேல்,தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன்,வட்டார கல்வி அலுவலர்கள் மாலதி,லட்சுமிதேவி,விஏஓ சந்திரசேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.