சென்னை:
சென்னை பள்ளிகுப்பம், சொக்கலிங்க நகர், வானகரத்தை சேர்ந்த திரு.பாலமுருகன், தேவி தம்பதியின் மகன் நரேஷ் என்ற மாணவன் ராஜா குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் அதே பள்ளியில் வில் வித்தை அம்பு ஏய்தல் போட்டியில் 15 நிமிடம் 47 வினாடியில் 250 அம்புகளை எய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இதை பற்றி கூறிய மாணவன் எனது தாய், தந்தைக்கும் பயிற்சியாளர் ரத்ன சபாபதி அவர்களுக்கும், என் பள்ளியின் தாளாளர் திரு. கே. ஜெகநாதன், முதல்வர் திருமதி. சுவர்ணலட்சுமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய மாணவன் மேலும் பல்வேறு சாதனைகளை செய்து என் பள்ளிக்கும் தமிழக அரசுக்கும் பெருமை சேர்ப்பேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.