இயக்குனர் சத்திய சிவா இயக்கத்தில் சசிகுமார் ஹரிப்ரியா விக்ராந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான்  “நான் மிருகமாய் மாற”. 

தனது தம்பியை கொன்றவனை பழி வாங்க போகும் சசிகுமார் அங்கே எதிரிகளின் கூலிப்படை கும்பலில் சிக்கிக் கொள்கிறார். பிறகு என்னவானது சசிகுமார் தனது தம்பியை கொன்றவனை பழி வாங்கினாரா? அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார்? என்பது தான் கதை. 

ஒத்த ஆளாக மொத்த படையத்தையும் தூக்கி சுமக்க வேண்டிய பொறுப்பு சசிகுமாரிடமே இருந்துள்ளது. சவுண்ட் இன்ஜினியராக வரும் “சசிகுமார்” தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். 

ஆக்ரோஷம், பரிதவிப்பு குடும்ப பொறுப்பு என அனைத்து விதமான எமோஷன்களையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக நடத்த விக்ராந்த் நடிப்பும் ஓகே… ஜிப்ரானின் இசை படத்திற்கு பலம்… இரவு நேர காட்சிகளுக்கு இசைதான் உயிர் கொடுத்துள்ளது. ஆனால் பாடல்கள் அனைத்தும் இனிமை இல்லையே….

சசிகுமார் இது போன்ற கதையை இனி தேர்ந்தெடுத்தால் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாவர் என்பது நித்திய உண்மை.  

படத்தில் வன்முறை காட்சிகள் அதிகப்படியாக உள்ளதால் குழந்தைகளுடன் இந்த படத்தை ரசிக்க முடியுமா? என்பது சந்தேகம் தான். நாம் காலம் காலமாக பார்த்து சலித்து போன ஒரு கதையாக இருந்தாலும் ஒரு திரில்லர் கலந்த வன்முறையாக இப்படம் உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here