இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தர மக்களையும் சந்தித்து பேசி தமிழக அரசின் நலத் திட்டங்களை விளக்கி ஆதரவு கேட்டு வருகிறார். இஸ்லாமியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஓட்டு கேட்டு வருகிறார்.
இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்திற்கு செல்ல தற்போது அரசால் வழங்கப்பட்டு வரும் மானியம் ரூ.6 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். சிறுபான்மை மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக சென்னை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஜெருசலேம் புனித யாத்திரைக்கான அரசு உதவித் தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது. கொடுங்கையூரில் மும்மதத்தினருக்கும் நல்லடக்கம் செய்வதற்கான இடுகாடு, கல்லறை தோட்டம், கபர்ஸதானத்துக்கு தலா 1 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு என்று கூறி வாக்கு சேகரித்தார். கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள ஆயர்கள், பிரார்த்தனைக்கு வந்த கிறிஸ்தவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுவதாக என்.ஆர்.தனபாலனிடம் உறுதி அளித்தனர்.
குப்பை கிடங்கு அகற்றல், தாய்-சேய் நல மருத்துவமனை, மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி, சாலைகளை அகலப்படுத்துதல், உடற்பயிற்சி கூடம் அமைத்தல், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்குதல், கழிவுநீர் கால்வாயை தூர்வாரி தூய்மையாக்குதல், இலவச கழிவறை – குளியலறை அமைத்தல், பூங்காக்கள் சீரமைத்தல், நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு பட்டா பெற்றுத் தருதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அவர் பிரசாரம் செய்து வருகிறார்.
படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக 3 மாதத்துக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். பெரம்பூர் தொகுதியில் அரசு மருத்துவமனை கொண்டுவரப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து என்.ஆர்.தனபாலன் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வருகிறார்.