முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படம் நல்லா இருக்கா?

0
55

அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் அர்ஷா பைஜு, சுராஜ் வெஞ்சாரமூடு, தன்வி ராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படன் தான் “முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்“.

கேரளாவில் விபத்து நடைபெற்றால் அதற்கு நஸ்டஈடு வாங்கி தரும் வழக்கறிஞராக சுராஜ் உள்ளார். இதில் மறுபுறம் வினீத் ஸ்ரீனிவாசன் எப்படியாவது மிகப்பெரிய வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த கேசும் கிடைக்காமல் உள்ளது.

ஒரு கட்டத்தில் சுராஜ் செய்யும் வேலை இவருக்கு தெரிய வருகிறது. பின்பு அதே வேலையை வினீத் ஸ்ரீனிவாசனும் செய்ய தொடங்குகிறார்.பிறகு இருவருக்கும் விரிசல் எற்பட்டதா? என்ன நடந்தது? என்பது படத்தின் மீதி கதை…..   

விமல் கோபாலகிருஷ்ணன் மற்றும் அபினவ் சுந்தர் நாயக் இருவரும் சேர்ந்து இந்த கதையை எழுதி உள்ளனர். சட்டங்களை பற்றி மிகப்பெரிய ரிசர்ச் பணிகள் தேவைப்படும் இந்த கதையை கச்சிதமாக எழுதி உள்ளனர். காட்சிக்கு காட்சி சிரிப்பலைகள் அள்ளும் அளவிற்கு படம் உள்ளது. 

வினீத் ஸ்ரீனிவாசன் பாடிலாங்குவேஜ் மற்றும் நடிப்பில் ஒரு வக்கீலாகவே வாழ்ந்து உள்ளார். தனக்கு வரும் எதிர்ப்புகளை லாபகரமாக அவர் கையாளும் இடங்களில் கைதட்டல்கள் பறக்கிறது. 

ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சனையில் மாட்டிகொண்டு எப்படி இதில் இருந்து வர போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது. ஹீரோ கதாபாத்திரத்தில் மட்டும் தனக்காக மற்றவர்கள் இறந்தாலும் பரவாயில்லை…. என்ற எண்ணம் ஏற்க முடியவில்லை….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here