கோவையில் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் பண்டாரிநாதன் தலைமையில் நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியின் நேர்முக உதவியாளர் பக்தவச்சலம் தெற்கு குடிமை பொருள் வட்டாட்சியர் ஷர்மிளா பேரூர் மதுக்கரை தனி வட்டாட்சியர்கள் நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் நா லோகு வெங்கடேசன் கதிர் மதியோன் பிரதீப் குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் நா லோகு கூறும் பொழுது சூலூர் அன்னூர் பேரூர் மதுக்கரை தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள்மூலமாக கோப்புகள் கையாள்வது அதிகரித்து வருகின்றது அதேபோல நில அளவை செய்ய மனு அளித்தவர்களுக்கு வரிசைப்படி நில அளவை செய்யாமல் அதிக லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நில அளவீடு செய்யப்படுகிறது இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உட்புறமும் வெளிப்புறமும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில் உள்ளது மேலும் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்தில் பல வருடங்களாக ஒரே கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சூலூர் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை அதற்கான பதில்களும் அனுப்பாமல் காலதாமதம் செய்து வருகிறார்கள் நிலுவையில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர் குறித்த பெயர் பலகை வைக்கப்பட வேண்டும்.
கோவையில் உள்ள சினிமா தியேட்டர்களில் வாகன நிறுத்த கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட நியாய விலை கடை கண்காணிப்பு குழுவில் குற்றச்செயலில் ஈடுபடும் நுகர்வோர் நிர்வாகி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை உடனடியாக நீக்க வேண்டும் இணைய வழியாக பட்டா பெயர் மாற்றம் விண்ணப்பம் செய்யும் போது அதிக கால தாமதம் செய்யப்படுகிறது அதனை தவிர்க்க வேண்டும்.
வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் உள்ள நிலம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதனை விரைந்து முடிக்க வேண்டும் ஐந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்றாண்டுகளுக்கு மேல் பணி புரியும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர் இதற்கு பதில் அளித்த வருவாய் கோட்டாட்சியர் பண்டாரிநாதன் நுகர்வோர் அமைப்புகள் தெரிவித்த கருத்துக்கள் புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக இக்கூட்டத்தில் தெரிவித்தார்.