புதுக்கோட்டை:
 
மாணவர்கள் ஆண்டு வருமானம் அதிகபட்சமாக ரூபாய் 8 லட்சம் வரை பெற்றுள்ளனர் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அகில இந்திய தொழில்நுட்ப அட்டல் தரவரிசை பட்டியலில் ஏரியா ரேங்கில் இடம் பெற்றுள்ளது. இந்திய கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அதிகபட்ச இடமான நான்கு நட்சத்திர அந்தஸ்தை கல்லூரி பெற்றுள்ளது. ஆசிரியர்கள் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சிகளை தினசரி பாடத்திட்டங்களுடன் நடத்தி வருவதால் இந்த ஆண்டு 132 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
 
86 பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரிக்கு வருகை தந்து வளாக தேர்வு நடத்தி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள். கிராமப்புற மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிய கல்லூரி நிர்வாகத்திற்கு விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்கல்லூரி நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு, ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு ,பொது மேலாளர் (வளர்ச்சி)  ஜெயக்குமார், பொது மேலாளர் கிருஷ்ணகுமார் , ஜான் கென்னடி( இயக்குனர் மாணவர் சேர்க்கை), கணினி துறை இயக்குனர் முகமது சாதிக், கல்லூரி இயக்குனர்.
 
ஜார்ஜ் கிளிங்டன், முதல்வர் ஜேஸ்பர் ஞானச்சந்திரன், கல்லூரி வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் ரவீந்திரன், பயிற்சித்துறை உதவி பேராசிரியர் பாலின் விசு மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை வளாக நிர்வாக அலுவலர் பேராசிரியர் விக்னேஷ் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here