வேலூர்:
சிங்கிரி கோவில் அருகே கன மழை காரணமாக 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. சிங்கிரி கோவில் அருகே கன மழை காரணமாக 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் உள் மாவட்டங்களான வேலூர் மாவட்டத்திலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோவில் அருகே பாயும் நாகநதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் காற்று காரணமாக காத்தாளம்பட்டு, தெற்கு கொல்லைமேடு, சிங்கிரிகோவில் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு இருந்த சுமார் 500- க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
– R.காந்தி (வேலூர் நிருபர்)