புதுடில்லி:
மீன்வளத் துறைக்கு ஊக்கமளித்து, அடுத்த 4 ஆண்டுகளில் உற்பத்தியை இரு மடங்கு உயர்த்த, ரூ.20,050 கோடி மதிப்பிலான பிரதமர் மீன் வளர்ப்பு மேம்பாட்டு திட்டத்தை, பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார்.
வீடியோ கான்ப்ரன்சிங் வாயிலாக, பீகார் மாநிலத்தின் மீன் வளம் மற்றும் கால்நடை துறைக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் துவங்கி வைத்தார். பீகாரில் வரும் அக்., அல்லது நவம்பரில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கால்நடை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் இ-கோபாலா என்ற செயலியையும் மோடி அறிமுகப்படுத்தினார்.
அதன் பின்னர் கால்நடை மற்றும் மீன்வள தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, ‘சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டு வரை ரூ.20,050 கோடி மீன்வளத் துறையில் முதலீடு செய்யப்படும். மீன்வளத் துறைக்காக இதுவரை செய்யப்பட்ட முதலீடுகளில் அதிகபட்ச தொகை இதுவே’ எனக் குறிப்பிட்டார்.
55 லட்சம் பேருக்கு வேலை
‘2024 – 25ம் ஆண்டில் மீன் உற்பத்தியை 70 லட்சம் டன் கூடுதலாக்குவது; ஏற்றுமதி வருவாயை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்துவது; மீன் வளர்ப்பவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது. அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை 10 சதவீதமாகக் குறைப்பது; மீன்வளத் துறையில் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வது’ போன்றவற்றை பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் இலக்காக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீனவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.