மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் S. பிஜ்ருள் ஹபீஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கையை கேலி செய்தும், இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தியும், இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக கருத கூடிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை பற்றி அருவருக்கதக்க வகையில் பேசி வீடியோ வெளியிட்ட கயவன் யோகா குடில் சிவகுமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், அமீர் கான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அசரப் அலி, மாநகர பொருளாளர் ஐயப்பன், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநகர செயலாளர் மஹீன் இப்பராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.