corona-update-in-tamil

தமிழகம் முழுவதும் ஊரடங்கு இல்லை, பாதிப்பு உள்ள இடங்களில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும்

கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்ததால் ஊரடங்கில் படிப்படியாக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்  திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது. மினி ஊரடங்குதான். கொரோனா அதிகரித்து வருகிற நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில், பாதிப்பு உள்ள குறிப்பிட்ட தெரு, வீடு ஆகிய பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம்  எனக் கேட்டுக்கொண்ட அவர், முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவுவதாகவும், முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here