மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 107.06 அடியாக உயர்ந்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,135 கன அடியிலிருந்து 3,773 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 106.94 அடியிலிருந்து 107.06 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 74.29 டிஎம்சியாக உள்ளது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.