போக்குவரத்து நெரிசல் கொண்ட சென்னை மாநகரப்பகுதியில் மிக விரைவாக, போக்குவரத்து நெரிசல் இன்றி பயணங்களை மேற்கொள்ள மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வழித்தடங்களில் கொண்டுவரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் மூன்று வழித்தடங்களில் சென்னையின் பல இடங்களிலும் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்பத்தில் இலவச பயணம், பண்டிகைக் காலங்களில் கூடுதல் நேரமாக மெட்ரோ ரயில் இயக்குவது என அவ்வப்போது புதுப்புது அறிவிப்புகளை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், வாட்ஸ்ஆப்  மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் முறையை அறிமுகம் செய்ய இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி எண்ணிற்கு ‘Hi’ எனக் குறுந்தகவல் அனுப்பினால் ‘Chart Board’ என்ற தகவல் வரும். அதனை பயன்படுத்தி நேரடிப் பயணச்சீட்டு, பயண அட்டை முறை, கியூ.ஆர் கோட் வாயிலாக பணம் செலுத்தி பயணிக்கும் முறை என மூன்று முறைகளைப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here