புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் “மெய் வழி சாலை” அமைந்துள்ளது. இங்கு அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். இவர்கள் ஒற்றுமையுடன், ஒழுக்கத்துடன் “மெய் வழி சாலை ஆண்டவர்கள்” அவர்களை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதற்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், மத பிரச்சனைகளை தூண்டும் விதமாகவும் சிவயோகி என்ற யூடியூப் சேனலில் சிவக்குமார் என்பவர் மெய் வழி மதத்தை கீழ்த்தரமாக பேசி வந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து மன உளைச்சல் அடைந்த மெய் வழியை பின்பற்றும் மக்கள் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர். இந்த புகாரின் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
சிவபெருமான், வள்ளல் பெருமான், நபி பெருமான் என அனைத்து புனிதமானவர்களையும் இழிவுப்படுத்தி தனது யூடியூப் சேனலில் சிவக்குமார் பேசி வந்தது தெரியவந்துள்ளது. இதனால் மத போதகர்களும் இவர் மீது தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். இவரின் சிவயோகி என்ற யூடியூப் சேனலை முடக்கம் செய்து சிவகுமாரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கின்றனர் மத போதகர்கள். மத கலவரத்தை தூண்டி வரும் சிவக்குமார் சிக்குவாரா? நலுவுவாரா? பார்ப்போம்.