சென்னை:
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மருந்து கடைகளில் இருந்து பெறப்படும் சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை டானிக் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் சட்டம் -1940 மற்றும் -1945 அட்டவணை “X “H”,“H1” Drugs குறிப்பிட்டுள்ள மருந்து. மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துகடைகளிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.