இரண்டரை மாதத்தில், முகக் கவசம் அணியாமல் ஊர் சுற்றியதாக 15.34 லட்சம் பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தமிழகத்தில், ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களை இயக்குவோர், முக கவசம் அணியாமல் ஊர் சுற்றுவோர் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலிக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
அதை மீறி, ஏப்ரல் 8 முதல், நேற்று முன்தினம் வரை, மாநிலம் முழுதும் முக கவசம் அணியாமல் ஊர் சுற்றிய 15.34 லட்சம் பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றாத 80 ஆயிரத்து 432 பேர் மீதும் வழக்கு பதிந்து, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.