பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “லவ் டுடே”

இந்த கதையில் உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) நிகிதா (இவானா) இருவரும் காதலர்கள். ஒருவரையொருவர் நன்கு அறிந்து வைத்திருப்பதாக நினைத்துக் காதலித்துக் கொண்டிருக்கும் சூழலில் நிகிதா அவரது தந்தை வேணு சாஸ்திரி (சத்யராஜ்) வசம் சிக்கிக்கொள்கிறார்.

இருவரையும் அழைத்துப் பேசும் வேணு சாஸ்திரி, இருவரும் அவரவர் ஸ்மார்ட்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விநோத நிபந்தனை ஒன்றை விதிக்கிறார். அதன்படி ஒருவர் மற்றொருவர் செல்போனை பயன்படுத்தத் தொடங்க, அதுவரை வெளியில் தெரியாத பூதம் கிளம்பி, அவர்கள் காதலுக்கு ஆடு-புலி ஆட்டம் ஆடுகிறது. இறுதியில் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை….. 

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். வேணு சாஸ்திரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் பக்காவாக பொருந்திப் போகிறார்.

யோகிபாபு, ராதிகா சரத்குமார், ரவீனா உள்ளிட்டோர் கதாபாத்திரம் கேட்கும் நடிப்பை அள்ளிக் கொடுத்துள்ளனர். படத்தின் இறுதியில் வரும் லாக்அவுட் ஐடியா நவீன யுக காதலை சொல்கிறோம் என்ற ஸ்மார்போன் யுவ-யவுதிகளுக்கு தோன்றாமலிருப்பது ஏன் என்ற லாஜிக் கேள்வி எழாமலில்லை.

காட்சிகளுக்கான உணர்வுகளை கட்டியெழுப்பியதில் யுவன் சங்கர் ராஜாவுக்கான பங்கு அளப்பரியது. 90’ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸ்களுக்குமான இசையமைப்பாளர் தான், என்பதை உணர்த்தும் வகையில் பின்னணி இசையில் பலம் சேர்த்திருக்கிறார்.

நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசத்தையும், பழங்குடி மக்களின் உடைகளையும் வைத்து கிண்டலடித்திருப்பது உண்மையில் விமர்சனத்துக்குரியது. ஆனால் இந்த படத்தை குடும்பமாக பார்க்க முடியுமா? என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கோ…..

இந்த “லவ் டுடே” பார்த்தால் பத்திக்கும்……   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here