செங்கல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை நிஜாம் பாய் (45) என்பவர் செங்கல்பட்டு பேருந்து நிலையம் உள்ளேயே கடை எடுத்து தைரியமாக விற்பனை செய்து வருகிறார். பக்கத்து கடைகாரர்கள், சமூக ஆர்வலர்கள் கேட்டதற்கு எனக்கு மேல் இடம் வரை செல்வாக்கு இருப்பதாக கூறி லாட்டரி சீட்டுகளை தொடர்ந்து  விற்பனை செய்து வருகிறார்.

இவரின் மூன்று சக்கர ஆக்டிவா வாகனத்தில் வாகன நம்பர் இல்லாமலேயே நெடுஞ்சாலையில் ஓட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. கடைக்கு வருபவர்களிடம் லாட்டரி நம்பர் எழுதும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அடுத்து ஆன்லைன் லாட்டரி விற்பனையை தொடங்க போவதாகவும் கூறப்படுகிறது. நிஜாம் பாய் மீது செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுப்பாரா? பார்ப்போம்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here