புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்

25

புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்

வருகின்ற 2021 மார்ச் 29 & 31 மற்றும் ஏப்ரல் 2 & 3 (4 நாட்கள்) ஆகிய நாட்களில், சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கபெருமாள் கோவில் – செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து

1. சென்னை கடற்கரையிலிருந்து காலை 09:32 , 10:08 மற்றும் 10:56 மணிக்கு செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில்கள் 2021 மார்ச் 29 & 31 மற்றும் ஏப்ரல் 2 & 3 ஆகிய தேதிகளில் சிங்கபெருமாள் கோவில் – செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2. செங்கல்பட்டிலிருந்து காலை 11:30, பகல் 12:20 மற்றும் மதியம் 01:00 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் 2021 மார்ச் 29 & 31 மற்றும் ஏப்ரல் 2 & 3 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு – சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

புறநகர் சிறப்பு ரயில் ரத்து

1. திருமால்பூரிலிருந்து காலை 10:40 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில் 2021 மார்ச் 29 & 31 மற்றும் ஏப்ரல் 2 & 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது .

ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கு பதிலாக திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து பகல் 12:10 மணிக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here