வேலூரை அடுத்த சிவநாதபுரம் மலையடிவாரத்தில் மர்மநபர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக அரியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை மலையடிவாரபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
பின்னர் அந்த பகுதியை சோதனை செய்தபோது அங்கு 8 லாரி டியூப்களில் 240 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அந்த சாராயம் மிகவும் விஷத்தன்மையுடையதாக இருந்தது. இதையடுத்து அதில் மாதிரிக்காக சாராயத்தை எடுத்துக் கொண்டு மற்ற சாராயத்தை அங்கேயே கொட்டி அழித்தனர்.
மேலும் தப்பியோடியவர் குறித்து விசாரணை செய்ததில் அவர் குருமலையை சேர்ந்த பொன்னுசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.