காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் மடாதிபதியான மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் நேற்று காலை மறைந்தார். கோவிலூர் மடாலயத்தில் மடாதிபதியாக இருந்த நாச்சியப்ப தேசிய சுவாமிகளுக்கு பிறகு 13 வது மடாதிபதியாக மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றார்.
சிறந்த தமிழ் புலமை மிக்க, எம்.எஸ்.சி., ஜியாலஜி பட்டதாரியாவார். சிறந்த முருக பக்தர். கோவிலூர் சிறந்த கல்வி கூடமாக திகழ்வதற்கு இவர் ஒரு முக்கிய காரணமாக விளங்கியவர், நேற்று காலை மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார். இவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.