கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனக்கோரி தொடரப்பட்ட வழக்கை செப்.,27 க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளதாவது: கோடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 8 பேரை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காக மனுதாரர்கள் மூவரும் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் தெளிவானதாக இல்லை. கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை. ஏன் விசாரிக்க வேண்டும், ஏன் சம்மன் அனுப்ப வேண்டும் என்ற காரணங்கள் குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததுடன், இந்த மனு குறித்து போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.,27 க்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here