கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர்கள் பகவல் சிங்-லைலா தம்பதி. பகவல்சிங் உள்ளூரில் பரம்பரை மருத்துவராக இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காலடியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த ரோசிலின் என்ற பெண் மற்றும் கேரளாவில் மற்றொரு லாட்டரி சீட் விற்பனை செய்து வந்த தமிழ்நாட்டில் தருமபுரியை சேர்ந்த பத்மா என்ற பெண்ணையும் நரபலி கொடுத்துள்ளனர். 

இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரஷித் என்கிற முகமது ஷஃபி பணத்தேவை இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பகவல்சிங் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளார். அங்கு மூவரும் சேர்ந்து இரண்டு பெண்களையும் நரபலி கொடுத்து சடலத்தை புதைத்துள்ளனர். காணாமல் போன இரு பெண்களின் உறவினர்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இந்த மூவரும் கையும் களவுமாக சிக்கினர். மூன்று பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 3 பேரையும் 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.  

இதற்கிடையில், நரபலி கொடுக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 26 பெண்கள் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 14 பெண்களும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 12 பெண்களும் காணாமல் போயுள்ளனர். ஒருவேளை இவர்களும் நரபலி கொடுக்கப்பட்டிருப்பார்களா என 
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நரபலி கொடுத்து வந்த பகவல்சிங் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், பிரிட்ஜில் இருந்து 10 கிலோ மனித இறைச்சி மற்றும் எலும்புத் துண்டுகளை கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பகவல்சிங் வீட்டைச் சுற்றி சோதனை நடைபெற்று வருகிறது. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here