கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பத்தில் உள்ள மகாதேவமலையில் செவ்வாய்க்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபத்தையொட்டி, மகாதேவமலையில் உள்ள காமாட்சியம்மன் உடனுறை மகாதேவா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள அகண்டத்தில் ஸ்ரீமகானந்த சித்தா் சுவாமிகள் நெய் தீபத்தை ஏற்றினாா்.
இந்த நிகழ்ச்சியில், மகாதேவமலை கல்வி அறக்கட்டளை தலைவா் பாஸ்கா், பிரமுகா்கள் அனுரெட்டி, முருகன், ஊராட்சித் தலைவா் கு.சிவரஞ்சனி, செந்தில்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜெயா முருகேசன், சரளா கலைவாணன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.