கர்நாடகாவில் ஊரடங்கு!
பெங்களூரு:
பிரிட்டனில், பரவும் புதுவகையான கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, கர்நாடகாவில்நாளை (24ம் தேதி) முதல் ஜன.,2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் கர்நாடகாவில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடியூரப்பா கூறுகையில்:
பிரிட்டனில் பரவி வரும் புதுவகையான கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, நாளை(டிச.,24) முதல் ஜன.,2 வரை இரவு 11 மணி முதல் காலை5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
சுகாதார அமைச்சர் சுதாகர் கூறுகையில், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரசை , மாநிலத்தில் பரவாமல் தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மக்கள் மாநிலத்திற்குள் பயணம் செய்ய தடையில்லை. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனக்கூறினார்.
கொரோனா பரவல் காரணமாக, மஹாராஷ்டிராவிலும் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.