தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956 டிசம்பர் 27ம் நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி ஒரு வார காலத்திற்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஆட்சி மொழி சட்ட வாரம் நிறைவு நாளை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட தமிழ் மொழி விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். 

இந்த பேரணிக்கு முன்னதாக தமிழர்களின் கலை வடிவங்களில் ஒன்றான கம்பு ஆட்டம், தப்பாட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற, இந்த ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, பொது மக்களை கவனத்தை ஈர்க்கும் வகையில், கோஷங்களை எழுப்பியும், பேண்ட் வாத்தியங்கள் முழங்கவும் சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here