என்னை கொல்ல சதி நடக்கிறது…..!

12

என்னை கொல்ல சதி நடக்கிறது…..!

கோவில்பட்டி:

தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக 3-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இரண்டு முறை இங்கு வெற்றிபெற்றவர் ஹாட் டிரிக் அடிக்கும் திட்டத்தில் தற்போது இருக்கிறார். இன்னொரு பக்கம் கடம்பூர் ராஜூவிற்கு எதிராக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்கி உள்ளார். இங்கு இரண்டு முறை அதிமுக வெற்றிபெற்று இருந்தாலும் இது கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கும் தொகுதியாகும்.

திமுக இங்கு திமுக கூட்டணி சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் இவர்கள் மூவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் முடித்துவிட்டு திரும்பும் போது அவரை சிலர் தாக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகின. கடம்பூர் ராஜூ காரை நோக்கி சிலர் வந்துள்ளனர்.

பட்டாசு காரை பார்த்து தீபாவளி பட்டாசுகளை வீசி உள்ளனர். ஆனால் டிரைவர் சுதாரித்ததால் இந்த பட்டாசுகள் காரில் விழுந்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். இவர் அளித்த பேட்டியில் கோவில்பட்டியல் திமுக அதிமுக இடையில்தான் போட்டி. இங்கு வேறு யாருக்கும் மக்கள் ஆதரவு இல்லை.

திட்டங்கள் 10 ஆண்டுகளில் நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறேன். மக்களுக்காக உழைத்து இருக்கிறேன். மக்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிலருக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் என்னை கொல்ல சதி நடக்கிறது. என் காரை தாக்க சிலர் முயற்சி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here