நடிகர் உபேந்திரா, சிவராஜ்குமார், கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண், முரளிசர்மா, நவாப்ஷா, ஜான்கொக்கேன், கோட்டா சீனிவாசராவ், தேவ்கில் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகி இருக்கிறது ‘கப்ஜா’ திரைப்படம்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தொடங்குகிறது படத்தின் கதை. சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு ஆர்கேஸ்வரர் (உபேந்திரா) குடும்பம் அமரேஸ்வரம் என்ற ஊருக்கு புலம் பெயர்கிறது. விமானப்படை வீரராக தனது வாழ்வைத் தொடங்கும் ஆர்கேஸ்வரர், காலத்தின் கட்டாயத்தால் டானாக மாறுகிறார். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகரிக்க, அரசாங்கமும் அவரை தீர்த்துக் கட்ட நினைக்கிறது. இறுதியில் எதிரிகளையும், அரசாங்கத்தையும் ஆர்கேஸ்வரர் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதே கதை….
கதாபாத்திர தேர்வு, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு படத்தில் ஓகே. ஆனால் கதை, இசை, லொக்கேஷன் என அனைத்திலும் கே.ஜி.எஃப் சாயல் தான் தெரிகிறது. சாயல் தெரிந்தால் போதுமா? கதை சாய்ந்துள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர் தான் இந்தப் படத்திற்கும் இசை அமைத்துள்ளார். ஆனால் இசை சண்டையின் இரைச்சல். உபேந்திரா, ஸ்ரேயா, கிச்சாசுதீப் உள்ளிட்ட நடிகர்களும் பிரமிக்க வைக்கும் சண்டைக்காட்சிகளும் இருந்தாலே போதும் என்று இயக்குநர் முடிவு செய்துவிட்டார். கலில், பகீரா என பெரிய பெரிய டான்களின் காட்சி எதற்கு என்றே தோன்றுகிறது. கே.ஜி.எஃப் போல் இந்த படமும் இருக்கும் என்று நினைத்து திரையரங்கம் போனால் காது வலி தான் வரும்.