ஜியோ 5ஜி வந்தாச்சு…

0
7

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி இன்று சென்னை  மற்றும் ராஜஸ்தானில் மாநிலத்தின் நத்வரா நகரஙக்ளில் ஜியோவின் 5ஜி சேவையைத் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் ஜியோ சேவையைப் பெறுவது மிகவும் எளிமையாகப்பட்டுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோவின் அதிவேக 5ஜி சேவையை அவர்கள் வீட்டிலிருந்தே பெறமுடியும். ஜியோ டூட்ரு 5ஜி (True 5G) சேவையின் வைஃபை வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5ஜி சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது:

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி மாநிலங்களை அடுத்து தற்போது சென்னையில் அறிமுகமாகியுள்ள 5ஜி சேவையை உங்கள் போனில் ஜியோவில் இருந்து வரும் அழைப்பை வைத்தே பெறமுடியும்.

5ஜி சேவையைப் பெறத் தகுதியான போன்களுக்கு ஜியோவில் இருந்து வெல்கம் ஆப்பர் அழைப்பு வரும். அதன் பின்னர் வழிகாட்டுதல்கள் மூலம் 5ஜி சேவையை உங்கள் போனில் நீங்கள் எளிமையாகப் பெற முடியும். தற்போது இந்த சேவை சோதனை திட்டமாக உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் தொடங்கப்பட்டுள்ளது. ஜியோ 5ஜி மூலம் வாடிக்கையாளர்கள் 1 வினாடிக்கு 1 ஜிகாபிட்  அதிவேக இணைய சேவையை வரம்பற்ற விதத்தில் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் ஜியோ டூட்ரு 5ஜி சேவையை வைஃபை மூலம் பெறும் சேவையும் விரைவில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக மையங்கள் போன்ற பகுதிகளில் வரவுள்ளது என்று ஜியோ தெரிவித்துள்ளது. மேலும் ஜியோ 5ஜி சேவையைப் பெற அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் புதிதாக சிம் கார்டு மாற்றத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here