திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவுக்கு 6 ம் ஆண்டு நினைவு அஞ்சலி திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி நினைவு அஞ்சலி ஆதிமுக ஓபிஎஸ் அணியின் நகரக் கழகச் செயலாளர் நேதாஜி சி ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒட்டன்சத்திரம் நகர அவைத் தலைவர் வீராச்சாமி பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த் ஒட்டன்சத்திரம் ஒன்றிய அவைத் தலைவர் ரத்தினசாமி ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம். தங்கராசு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர் கதிரவன், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.பி செந்தில்நாதன் உறுப்பினர்கள் எஸ். பாபு, ஐ .தர்மலிங்கம் சிஎப்.கேண்டின் டேவிட் .செம்பரான் குளம் சி.என் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவிற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.