திருப்பத்தூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

0
17
சிவகங்கை:
 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அவைத்தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில், ஒன்றிய செயலாளர் சிவமணி, குணசேகரன், நகர செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் முன்னிலையில் அதிமுகவினர் காந்திசிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அங்கிருந்து மதுரையோடு வழியாக பேரணியாக வந்து அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கும் மலர் தூவி மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
 
இந்த பேரணியின் போது ஜெயலலிதாவின் புகழ் ஓங்குக, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் வாழ்க, வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க, கழகத்தை கட்டிக்காத்த காவலன் எடப்பாடியார் வாழ்க என்ற முழக்கங்களை எழுப்பி ஜெயலலிதாவின் பிறந்தநாளோடு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் வரவேற்று பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
 
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு இணை செயலாளர்கள் ஷஃபா ராஜா முகமது, ஆசிப் இக்பால், மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு பொருளாளர் பிரேம், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பழனிக்குமார், நகர துணை செயலாளர் ரவீந்திரன், நகர அவைத் தலைவர் புரட்சிமணி, ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன், பேரூராட்சி கவுன்சிலர் சையது முகமது ராபின்,  முன்னாள் நகர செயலாளர் சக்திவேல், முன்னாள் நகர துணை செயலாளர் சந்திரன், மாவட்ட பிரதிநிதி செல்லப்பாண்டி பாஸ்கரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல், பேச்சாளர் குறிஞ்சி நகர் சேது, வார்டு செயலாளர்கள் துரை பாண்டியன், கோபாலகிருஷ்ணன், ஜஸ்டின் பீர்முகமது, செல்வம், வைரவராஜ்  சீனிவாசன், காத்தமுத்து, காரையூர் சின்னையா, வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆத்தங்கரைப்பட்டி ஆறுமுகம், திருப்புத்தூர் நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நவநீத பாலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு முருகேசன், புதுகாட்டாம்பூர் ராஜா, சதீஷ்குமார், கோட்டையிருப்பு பழனிக்குமார், கருப்பூர் பொன்னுத்தேவன், மகளிர் அணி புதுப்பட்டி மீனாள், பிரேமா மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here