இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது ஜவான்.
நாட்டைக் காக்கும் ஜவான் ஷாருக்கான். ஒரு சம்பவத்தால் அவர் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுகிறார். அவரின் மனைவியான தீபிகா தன் கணவரைக் கொல்ல வந்தவரைக் கொன்று விட்டு, ஜெயிலுக்கு செல்ல அங்கு அவருக்கு குழந்தைப் பிறக்கிறது.
அந்த குழந்தைக்கு அப்பாவின் அருமை பெருமை எல்லாம் சொல்லி, அவன் வளர்ந்து பெரியவனானதும் அப்பா தேசத்துரோகி இல்லை என நிரூபிக்க வேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறக்கிறார். மகன் வளர்ந்து அம்மாவின் சத்தியத்தைக் காப்பாற்றுகிறானா? அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை சமூக பிரச்சனைகளையும் இணைத்து ஆக்ஷன் காட்சிகளோடு சொல்லி இருக்கிறார் இயக்குநர் அட்லி.
ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் ஷாருக் அப்ளாஸை அள்ளுகிறார். காவல் துறையின் தலைமை அதிகாரி நர்மதாவாக நயன்தாரா ரசிக்க வைக்கிறார். வெப்பன் பிசினஸ் டீலர் காளீஸாக விஜய் சேதுபதி ரசிகர்களை கவர்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் தீபிகா படுகோன் கலங்க வைக்கிறார். சரி இது ஒரு புறம் நிறைகள் இருக்க
குறைகள் என்ன?
கதையின் நீளம் அதிகம்….. பழைய கதையையே திரும்ப பார்க்கும் நிலை…. ஜெயில் காட்சிகள் ரொம்ப ஓவர் டா சாமி…. குண்டு வெடித்தால் கூட யாருக்கும் எதுவும் ஆகாதப்பா?! கதையில் சுவாரஸ்யம் இல்லவே இல்லை…. இரண்டாம் பாதி பார்க்கும் ரசிகர்களுக்கு பொறுமை வேண்டும் நண்பா…..
மொத்தத்தில் இந்த ‘ஜவான்’ ஜவ்வு…..