ரத்த வெள்ளத்தில் காளைகள்… பதறிய ஊர் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து காளைகள் பங்கு பெற்றுள்ளனர். இதேபோன்று விராலிமலை மற்றும் மணப்பாறையில் இருந்து டாட்டா ஏசி வாகனத்தில் ஆறு பேர் தங்களது மூன்று ஜல்லிக்கட்டு காளைகளோடு வந்தனர் இவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளைகளை அவிழ்த்து விட்டு விட்டு மீண்டும் டாட்டா ஏசி வாகனத்தில் மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது டாட்டா ஏஸ் வாகனம் திருவரங்குளம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டாட்டா ஏஸ் வாகனத்தில் இருந்து மணப்பாறை அருகே செவலூரைச் சேர்ந்த மதியழகன் (25), புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குளம் சேர்ந்த விக்கி (20)இரண்டு பேர் மற்றும் டாடா ஏசி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டாட்டா ஏஸ் வாகனத்தில் இருந்த மூன்று காளைகளில் இரண்டு காளைகள் உயிரிழந்தன. ஒரு காளை மட்டும் சிகிச்சைக்காக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். டாட்டா ஏசி வாகனத்தில் வந்த மீதமுள்ள நான்கு பேர் மட்டுமல்லாது பேருந்தில் வந்த ஓட்டுநர் உள்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வட்டார போக்குவரத்து அலுவர்கள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை நிருபர் – V.பழனியப்பன்

 
Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178