காவல்துறையில் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரஜினி தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் மகன் வசந்த ரவி மற்றும் பேரன் ரித்திக் உடன் அரக்கோணத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறார். வசந்த் ரவி காவல்துறையில் உதவி கமிஷனர் ஆக பணிபுரிகிறார்.
சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரஜினியின் மகனை அந்த கும்பல் கொலை செய்து விடுகிறது, தன் மகனை தான் நேர்மையாக வளர்த்ததால் தான் தன் மகன் இறந்து விட்டதாக எண்ணி ரஜினி அந்த கும்பலை பலி வாங்க வெறித்தனமாக களம் இறங்குகிறார். வில்லன் விநாயகனுக்கும் ரஜினிக்கும் பகை தொடங்குகிறது. இறுதியில் ரஜினி பகை தீர்த்தாரா? குடும்பம் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
ரஜினி படம் என்றாலே மாஸ் இருக்கும் அதே போல் இந்த படத்திலும் செம மாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, சுனில், கிஷோர் ஆகியோர் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். சிவராஜ்குமார், மோகன்லால் காட்சிகள் சிறப்பு. அனிருத் இசை அருமை.
படத்தில் ஜாக்கி ஷெராஃப், மாரிமுத்து, தமன்னா, ஜாபர் சாதிக், கிஷோர், சரவணன், அறந்தாங்கி நிஷா, விடிவி கணேஷ், நாகேந்திர பாபு இவர்கள் காட்சிகள் எதற்கு வைத்தார்கள் என்றே தோனுகிறது?
காவாலா பாடல் திரையரங்கில் பார்க்க பெரிதும் எதிர்பார்க்கபட்டது ஆனால் கதையோடு வரும் வீடியோ பாடல் பார்க்கும் போது இந்த பாடலுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்தார்கள் ஆனால் திரையரங்கில் பார்க்கும் போது காரி துப்ப வைத்து விட்டது.
யோகி பாபு காமெடி என்ற பெயரில் தலை வலியை ஏற்படுத்திவிடுகிறார். ரஜினியை இப்படி காமெடி கவுண்டர் அடிப்பது சுத்தமாக ஒர்க்கவுட் ஆக வில்லை…. கதை அங்கும் இங்கும் சுற்றி திரிகிறது….. தந்தை மகன் பாசம், சிலை கடத்தல் எதிர்ப்பு இதை வைத்து கதை நகருகிறது…..
ரஜினி, அனிருத், சிவராஜ்குமார், மோகன்லால் இவர்கள் இல்லை என்றால் இந்த படம் கரைந்திருக்கும்……
இந்த ஜெயிலரை ஒரு முறை பார்த்து விசில் அடித்துவிட்டு வரலாம்.
RATING 2/5