சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அருகேயுள்ள பாண்டியன் நகரில், போதிய பஸ்கள் கிடைக்காமல் மாணவிகள் நெடுந்தூரம் நடந்து செல்வதோடு, மாணவர்களும் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலை, மட்டுமின்றி அழகப்பா இன்ஜி., கல்லூரி, அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பா பள்ளிகள் உட்பட பல்வேறு கல்வி மையங்களுக்கு காரைக்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

பள்ளி கல்லூரி நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில், போதிய பஸ்களை இயக்க மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், போதிய பஸ்கள் கிடைக்காமல் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிச் செல்லும் அவலம் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here