சட்டத்திற்கு புறம்பாக வாடகைத்தாய் முறையில் நடிகை நயந்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளனர் என குற்றஞ்சாட்டி நட்சத்திர தம்பதிகள் உட்பட அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து பல கட்டங்களாக முயற்சி செய்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்கிற நிலையில் தான் செயற்கை முறை கருத்தரிப்பு செய்ய முடியும் என்ற நிலையில் நட்சத்திர தம்பதிகளான நயந்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றதாகவும்,  அக்டோபர் மாதம் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தம்பதியர் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் விக்னேஷ் சிவன், நயந்தாரா தம்பதியர் குழந்தை பெற்றிருப்பது தவறான முன்னுதாரணம் எனவும், இது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ள அவர், இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் செயல் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும், விக்னேஷ் சிவன், நயந்தாரா தம்பதியர் செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றிருப்பது விதிகளுக்கு உட்பட்டு நடந்துள்ளதா? என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்காமல் இருந்து வருவதும் சட்டத்தை மீறிய செயல் எனவும் குற்றஞ்சாட்டியுள்ள அவர், வாடகைத்தாய் நியமித்தலில் இருந்து எந்த மருத்துவமனையில் கருத்தரித்தல் நடந்தது போன்ற முழு விபரத்தை காவல்துறை கண்டறிந்து விக்னேஷ் சிவன், நயந்தாரா தம்பதியர் உட்பட அவர்களின் செயலுக்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரை அளித்துள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு ஆண்மை குறைவா? நயன்தாரா குழந்தை பிறக்க தகுதியற்றவரா? என சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here