350 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று விளையாடின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 350 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
 
அவர் 28 பந்தில் (4 பவுண்டரி, 2 சிக்சருடன்) 40 ரன்கள் எடுத்திருந்தபோது, ரியான் பராக் வீசிய பந்தில் பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
அட்டவணையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வரும் கெய்ல் நேற்று அடித்த 2 சிக்சர்களால் 351 சிக்சர்களை எடுத்துள்ளார்.  இந்த வரிசையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ் 237 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
 
இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 216 சிக்சர்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.  ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 214 மற்றும் 201 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178