சென்னை அணி வெற்றி பெற 135 ரன்….!

ஐ.பி.எல். தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
அதன்படி, முதலில் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 11 ரன்னில் வெளியேறினார்.
 

பிரியம் கார்க் 7 ரன்னிலும், அபிஷேக் வர்மா 18 ரன்னிலும், அப்துல் சமது 18 ரன்னிலும் அவுட்டாகினர். தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சகா ஓரளவு தாக்குப்பிடித்து 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ரஷித்கான் 13 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178