காரைக்குடி:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேரு யுவகேந்திரா சிவகங்கை மற்றும் வள்ளல் அழகப்பர் இளையோர் சங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டாக காரைக்குடி நாச்சிசுலியேந்தல் காளியம்மன் கோவில் அருகே கொண்டாடப்பட்டது ஜெனிபர் வரவேற்புரை ஆற்றினார்.
மும்தாஜ் பேகம் முகமது கனி தலைமையில் பாரிசால் பேகம் முன்னிலை வைத்தார் மகளிர் தின சிறப்புகளைப் பற்றி அழகப்பா அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் சித்ரா கலாம் வகுப்பறை ஆசிரியை லட்சுமி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பெல்வின் கேண்டிடா வட்டாட்சியர் அலுவலகம் சங்கீதா மற்றும் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் ராணி ஆகியோர் கலந்து கொண்டு பொது வாழ்க்கையில் மகளிரின் பங்களிப்பு மற்றும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.
பின் அவர்களுக்கு பொன் துகில் அணிந்து கேடயம் வழங்கப்பட்டு கௌரிக்கப்பட்டார்கள் இறுதியாக நிகழ்ச்சியில் இந்திரா நன்றியுரை கூறினார் இந்நிகழ்வினை அழகப்பா கலைக் கல்லூரி மாணவி கன்னிகா தொகுத்து வழங்கினார்.