கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களிடையே போதை பொருட்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட,
மாணவர்களை கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்து தொகுதி வாரியாக குழுமம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி,கல்லூரி விடுதிகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட கல்வி அலுவலர்க ளுக்கும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறியப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.