இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி!

0
46

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதை, பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்ததாக முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.  அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டி முன்னேறியுள்ளது. இந்தியா அடுத்ததாக வங்கதேசத்துடன் விளையாட உள்ளது. முன்னதாக பாகிஸ்தானுடன் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இந்த அதிரடியான வெற்றியால் பாகிஸ்தான் ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை பாகிஸ்தர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இலங்கையிடம் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால் பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கும். இதன் காரணமாக இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர்  இந்தியாவிடம்  பாகிஸ்தான் நேற்று 228 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் இன்று இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக லைக் செய்துள்ளனர்.

இன்று நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இலங்கை வெற்றி பெற்றாலோ, அல்லது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டாலோ பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறும். இதனால் இந்த போட்டியை பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்துடன் விளையாட உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here