மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (மே 26) காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
குறிப்பாக, அமைச்சருக்குச் சொந்தமாகச் சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
 
மேலும், முக்கியமான  அரசு ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டின் முன்னால் கூடிய அவரது ஆதரவாளர்கள், வருமான வரித் துறையினரின் வாகனங்களைச் சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், கோவையில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் வீட்டின் முன்பு குவிந்துள்ள நபர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உணவு பொட்டலங்கள் மற்றும் சேர் ஆகியவை கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here