சென்னை அம்பத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். அவர்களை குறிவைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு புகார் வந்தது.

அதன்பேரில் நேற்று இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையில் மதுவிலக்கு போலீசார் அம்பத்தூர், கொரட்டூர், பட்டரவாக்கம் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் மூட்டை மூட்டையாக 24 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர்கள், நெமிலிச்சேரியைச் சேர்ந்த செந்தில் என்ற சதாசிவம் (வயது 38), வியாசர்பாடியை சேர்ந்த தீனா (29), அவருடைய மனைவி கவுசல்யா (27) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here