“உங்களை ஒரு ராணியைப் போல சிந்தியுங்கள். ஒரு ராணி எப்போதும்
தோல்வியடைய பயப்படுவதில்லை”
“ஒவ்வொரு பெண்ணின் வெற்றியும், இன்னொரு பெண்ணின் வெற்றிக்கு
உத்வேகமாக இருக்க வேண்டும்”
“பெண் தங்களுக்கான உரிமை குரலை தேட வேண்டியதில்லை, அந்த சக்தி
அவர்களிடத்திலேயே உள்ளது. ஒவ்வொரு பெண்களும் அந்த சக்தியை உணர்ந்து
வெளிக் கொணர வேண்டும், மக்கள் கேட்டு ஊக்குவிக்க வேண்டும்”
“நான் மட்டும் பல சவால்களை கொண்ட முதல் பெண் அல்ல, நான் வேலை
செய்யவும், குழந்தையைப் பெற்றுக் கொள்ளவும் முதல் பெண் அல்ல- இதற்கு முன்னர் பல பெண்கள் இதை செய்துள்ளனர்”
எனவே, பெண் சாதனையாளர்கள் குறித்து பல அசாத்திய சாதனைகளை
சொல்லிக் கொண்டே போகலாம். எந்தவொரு தொற்று பரவலும் பெண்கள்
சாதிப்பதையோ, பணி செய்வதைத் தடுக்க முடியாது என்ற வகையில் பிராண்ட்
அவதார், சக்தி மசாலா மற்றும் சுயசக்தி விருதுகள் (Homepreneur Award) வழங்கும்
விருது நிச்சயம் அவர்களை அங்கீகரிக்க தவறாது. தற்போது 4 ஆவது பதிப்பாக தி சுயசக்தி விருதுகள் (Homepreneur Award) அதீத கொண்டாட்டம், சக்தி, தேடல், ஆவலுடன் வருகிறது. பிராண்ட் அவதார் வீட்டில் இருந்து, குரல் இல்லாத பெண்கள் அங்கீகாரம் பெறும் வகையில் பிறந்தது தான் தி
சுயசக்தி விருதுகள் (Homepreneur Award). இந்த விருதுகள் மூன்று வெற்றிகரமான
பதிப்புகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. அங்கீகரித்தல், விருது, கொண்டாட்டம்
மற்றும் வீடுகளில் இருந்து பல்வேறு வகையான பேக்கரி தயாரிப்புகள்- பேக்கிங்,
டியூட்டரிங், ப்ரீலான்சிங், பியூட்டியூசியன், எழுத்து துறை, சுகாதார சேவைகள்,
கேட்டரிங் ஆகியவைகளை வீடுகளில் இருந்து வணிகம் செய்யும் பெண்களுக்கு ஒரு
தளமாக பிராண்ட் அவதார் விளங்குகிறது.
புதிய மற்றும் பல்வேறு விதமான 14 பிரிவுகளில் குறிப்பாக வேளாண்மை, ஹெல்த்கேர், ஹோம் ரீடைல், கலை மற்றும் பண்பாடு, விளையாட்டு மற்றும் முழு உடல் தகுதி, உணவு மற்றும் பானங்கள், அழகு மற்றும் ஆரோக்கியம், கல்வி மற்றும் இலக்கியம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் வீட்டு தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்பம், டிஜிட்டல் சுயசக்தி விருதுகள் (HOMEPRENEUR AWARDS) மேற்கண்ட பிரிவுகளில் ஹோம் ப்ரனார்ஷிப் மூலம் வருமானம் ஈட்டும் பெண்கள், சுய சக்தி விருதுகளை பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை கொண்ட நடுவர் குழுவால் இறுதி செய்யப்படும்.
நடுவர் குழுவில் இடம் பெறும் பல்துறை
பெண்களின் பெயர் விவரம்:
திருமதி ரத்னா சிவராமன்- தொழில்முனைவோர் மற்றும் ஊடக ஆளுமை
திருமதி வீணா குமாரவேல்-நிறுவனர், நேச்சுரல்ஸ் சலூன். திருமதி நினா ரெட்டி-
சவேரா ஹோட்டல்களின் இணை நிர்வாக இயக்குநர். திருமதி அருணா
சுப்பிரமணியம் – மேலாண்மை ஆலோசகர் மற்றும் பூமிகா அறக்கட்டளை
அறங்காவலர்.
திருமதி சுசீலா ரவீந்திரநாத் – பத்திரிகையாளர், கட்டுரையாளர் மற்றும் வணிக ஆசிரியர் திருமதி ரிங்கு மெச்சேரி – சமூக தொழில்முனைவோர் மற்றும் சென்னை தன்னார்வலர்களின் நிறுவனர் டாக்டர் செளந்தர்யா ராஜேஷ் – நிறுவனர் மற்றும் தலைவர், AVTAR கேரியர் கிரியேட்டர் மற்றும் FLEXI Careers India. டாக்டர் லதா ராஜன் – நிறுவனர், மா ஃபாய் கன்சல்டன்ட். திருமதி லட்சுமி ரவிச்சந்தர் – இவன்ட் ஆர்ட்டின் நிறுவனர். திருமதி பூர்ணிமா ராமசாமி, தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஒப்பனையாளர் மற்றும் தொழில்முனைவோர்.
திருமதி கிருத்திகா ராதாகிருஷ்ணன்- Arkay புரொடக்சன்ஸ். திருமதி ஹேமா ருக்மணி – தலைமை நிர்வாக அதிகாரி, தேனாண்டாள் என்டர்டெயின்மென்ட். திருமதி ஷைலாஜா சேட்லூர்- நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்- சினிமா
ரெண்டெவ்யூஸ். டாக்டர் மணிமேகலை மோகன்- நிர்வாக அறங்காவலர் மற்றும்
தாளாளர், எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் மற்றும் எஸ்.எஸ்.எஸ்.வி.எம். சர்வதேச பள்ளி, கோவை. டாக்டர் ஸ்ரீனிஷா மாறன்- பாரத் பல்கலைக்கழகம் மற்றும்
ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரித் தலைவர். திருமதி எம்.எஸ்.ரவூபா – எச்.கே- மீடியா
மேசன். நடுவர் குழுவின் எண்கள், வெற்றி கதையையும் விருதுகளின் பெருமையைப்
பறைசாற்றுவதாக உள்ளது.
முதல் மூன்று சீசன்களில் தமிழ்நாட்டிலிருந்து (ஆஃப் லைன் மற்றும் ஆன்லைன்
இரண்டும்) ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்ள் பெறப்பட்டன. இதில் 1800 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டு, 300 பேர் நேர்காணல் செய்யப்பட்டனர். இறுதியாக 90 பெண்கள் விருது பெற தேர்வு செய்யப்பட்டனர்.
நடுவர் குழுவின் பயிற்சி பட்டறைகளும், போதுமான தொடர் வழிகாட்டுதல் உள்ளது. தற்போது 4 -வது சீசன் விருதுகளை பெற மே 21-ம் தேதி தொடங்கி ஜூன் 18 வரை பதிவு செய்யலாம். தொடர்ந்து ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இணையவழி நேர்காணல் நடைபெறுகிறது. ஜூலை 25 ஆம் தேதி இணையவழி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
பிராண்ட் அவதாரின் தலைமை நிர்வாக அலுவலர் திரு ஹேமச்சந்திரன்
கூறுகையில், முதல் மூன்று ஹோம்பிரீனியர் விருதுகள், பெண்களை அங்கீகரிப்பது
மட்டுமல்லாமல், விருதுகளுக்குப் பின்னால் அவர்கள் பயனடைந்தனர்.
விருதுகளுக்குப் பிந்தைய பயிற்சி பட்டறை மூலம் அவர்களின் வாய்ப்புகள்
பன்மடங்கு ஆகின, அவர்களின் நெட்வொர்க்குகள் விரிவாகின, பன்முக அறிவைப்
பெற்றனர்.
HOMEPRENEUR CIRCLE இன் அறிமுகம் விழுதுகளில் இருந்து தொடங்குகிறது.
விருதுகளுக்கு அப்பாற்பட்டு, ஹோம் ப்ரீனியர்கள் போதிய உதவி கிடைத்துள்ளது.
இந்த சீசன் அனைத்தும் டிஜிட்டல் முறையில் இணையவழியில் நடத்தப்படுகிறது.
"கடந்த மூன்று சீசன்களின் ஊக்கமளிக்கும் வகையிலான பயணமாக இது உள்ளது.
இந்த தொற்று பரவல் காலத்தில் பல்வேறு பெண்கள் வீடுகளில் இருந்து தொழில்
தொடங்கி நடத்தி வருகின்றனர். எனவே, இந்த முறை விருதுகளுக்கான விண்ணப்ப
பதிவுகள் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கிறோம். நான்காவது சீசன் ஹோம்
ப்ரனார் விருது (சுயசக்தி விருது) வழங்கும் விழா என்பது புதுவகை பல்வேறு
சுவாரஸ்யங்களை கொண்டுள்ளது.
தேர்வுக்கான விதிமுறைகள்: எண்ணங்களின் தனித்துவம், அளவிடுதல் மற்றும்
முன்னேற்றம், வருவாய். நடைமுறை: விருதுக்கான பதிவுகள் என்பது இணையவழி
நேர்காணலுக்கான முன்பாக அகத்தாய்வு மூலம் வடிகட்டப்படும். நடைமுறைகள்
அனைத்தும் முழுவதும் இணையவழி மூலம் நடத்தப்படுகிறது. தேர்வுக்கான
விதிமுறைகள் அனைத்தும் பல்துறை வாய்ந்த நடுவர் குழு மூலம் மதிப்பீடு செய்யப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களை தேர்வு செய்யவர். பின்னர்
வெற்றியாளர்கள் ஜூலை 25 ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருது
வழங்கப்படும்.
பிராண்ட் அவதார் பற்றிய விவரம் பிராண்ட் அவதார் நிறுவனத்தின் நிறுவனர்
மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் திரு ஹேமச்சந்திரன் தலைமையில்
பிராண்டிங் மற்றும் மேலாண்மை நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனமாக விளங்கி
வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் தனித்துவமான பல்வேறு அற்புத நிகழ்வுகளை
நடத்தியுள்ளது. அதில் சமீபத்திய நிகழ்வுகள் PRIDE OF TAMILNADU AWARDS, FASHION
PREMIER WEEK ஆகும்.
பிராண்ட் அவதார் நிறுவனம் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு முற்றிலும்
ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல் நிகழ்வுகள் மற்றும் பிராண்ட் மேலாண்மை
தீர்வுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் பிராண்ட் அவதார் HOMEPRENEUR
AWARDS விருது நிகழ்வை நடத்திட உள்ளது. இந்த நிகழ்வு வீட்டிலிருந்து வியாபாரம்
செய்யும் பெண்களுக்கு அவர்களின் வருமானத்தை சம்பாதிக்க அல்லது அதிகரிக்க
விருது வழங்குவதற்கான தளமாக விளங்கும்.
சுயசக்தி விருதுகள் (HOMEPRENEUR AWARDS) விருதுக்கு விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம். சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்தார் தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் Dr ஜெ.ராதாகிருஷ்ணன் ஹோம்ப்ரீனியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான www.homepreneurawards.com / www.suyasakthiawards.com இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.
அதேபோல பிராண்ட் அவதாரின் முயற்சிக்கு பாராட்டைத் தெரிவித்துக் கொண்ட
முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவம்
குறித்து வலியுறுத்தி பேசினார்.மேலும் தமிழக அரசு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விரைவில் தொற்றில் இருந்து மீள்வோம் என தெரிவித்தார்.
நடிகையும், சமூக ஆர்வலருமான சுகாசினி மணிரத்னம் பேசுகையில்,
ஹோம்ப்ரீனியர் விருது நிகழ்ச்சியில் ஏற்கெனவே பங்கேற்றது குறித்த அனுபவங்கள்
பற்றி பகிர்ந்து கொண்டார். கரோனா தொற்று காலத்திலும் பெண்
தொழில்முனைவோரை உதவிடும் வகையில் பிராண்ட் அவதார் முயற்சிகளை
மேற்கொண்டிருப்பது நல்ல அம்சமாகும்.
திரைப்பட இயக்குநர் மணிரத்னம், பிராண்ட் அவதார் குழுவின் பிரமாண்ட நிகழ்ச்சி
வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். பெண்கள் சாதனையாளர்கள்,
அவர்களிடம் வெற்றி பெற அனைத்து சக்தியும் உள்ளது என்றார். பின்னர்
சுகாசினியுடன் இணைந்து சுயசக்தி விருதுகள் (HOMEPRENEUR AWARDS) சீசன் -4
வீடியோவை வெளியிட்டார்.
நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி, பிராண்ட் அவதாரின் முயற்சியை வெகுவாகப்
பாராட்டினார். மேலும், தொற்று காலத்தில் இணையவழியில் நடைபெறும் பதிவில்
அனைத்து பெண் தொழில்முனைவோரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.
அதேபோல உதவி தேவைப்படும் பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டவும்
தயாராக உள்ளதாகவும், அவர்கள் தங்களது வியாபாரத்தைப் பெருக்கிட
ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார். சமூக ஆர்வலராக இருக்கும் வேளையில், சுயசக்தி
விருதுகள் (HOMEPRENEUR AWARDS) சீசன் -4 வெற்றி கோப்பையை தொடங்கி
வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் ஆரி.
சுயசக்தி விருதுகள் (HOMEPRENEUR AWARDS) தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள
நடுவர்கள் அனைவரும் இணையவழியில் கலந்து கொண்டனர். மேலும்,
போட்டியாளர்களை இணையவழியில் சந்தித்து நேர்காணல் செய்ய மிகுந்த
ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தினர். நடுவர் குழு போட்டியாளர்கள்
அனைவருக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தது.
பிராண்ட் அவதார் தி செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக், ஒரு புதிய லீக்
(ஸ்போர்ட்ஸ் + என்டர்டெயின்மென்ட்) நிகழ்ச்சி கடந்த 2016 ஜனவரியில்
சென்னையில் தொடங்கப்பட்டது. இப்போது PAN-India நிகழ்வு சீசன் 1-ஐ முக்கிய
மூன்று நகரங்களில் நடத்தியது. இறுதி போட்டி மலேசியாவில் நடைபெற்றது. திரு.
ஹேமச்சந்திரன் ஏஞ்சல் முதலீட்டாளர் மற்றும் THE CHENNAI ANGELS and INDIAN
ANGELS NETWORK உறுப்பினராக உள்ளார். விருது வழங்கும் நிகழ்ச்சியின் முக்கிய
நிகழ்வு ஜூலை 25 இல் அவதார் இணையவழியில் நேரலை செய்யப்படும்.