கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது நீதிபதிகள், ‛கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்,’ என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் அவர்கள் கூறியதாவது: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம், தகனம் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் நடத்தப்படவில்லை. கொரோனாவில் பலியானவர்களின் உடல்களை தடுப்பு விதிகள் பின்பற்றி விரைந்து அகற்ற வேண்டும்.

நீதிமன்ற வளாகங்களையும், சென்னை பழைய சட்டக் கல்லூரியையும் சிகிச்சை மையங்களாக மாற்றலாம். குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்க வேண்டும். ஊரடங்கை கடுமையாக்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here